வணக்கம்,
உங்களுடையது காதல் திருமணம் ஆக இருந்தாலும் பெற்றோர்களால் நிச்சயிக்க கூடிய திருமணமாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சில காரணங்களால் திருமண வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுகிறது அந்த முதல் தவறோ அல்லது பிழையோ கசப்பான ஒரு அனுபவத்தையும் விரிசலயும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
கணவன் மற்றும் மனைவி செய்யக்கூடிய முதல் தவறும் அதிலிருந்து மீண்டு இன்பமான வாழ்க்கைக்கு கொண்டு செல்ல செய்யவேண்டிய வட்ரை பார்க்கலாம்.
கணவன் செய்யக்கூடிய தவறு:
1.கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வரவேண்டும் அப்பொழுதுதான் அந்த உறவு மிகவும் அன்யோன்யம் ஆக இருக்க கூடும். ஆனால் அந்த சண்டை பிறரால் ஏற்பட கூடாது, திருமணம் ஆன பிறகு பெற்ற தாயக இருந்தாலும் அது மனைவிக்கு அடுத்த படியே அது திருமணம் ஆன முதல் நாளில் தோன்றி விடாது படிப்படியாக நம் செய்யும் செயல்களின் மூலமும் நம் அவளிடம் நடந்து கொள்ளும் குணதின் மூலமும் அவள் நம்மேல் காட்டும் அக்கரயும் அன்பின் வெளிப்பாட்டின் மூலமும் தானாக தோன்றும். திருமணம் ஆன பிறகு தனிகுடித்தனம் ஆக இருந்தாலும் கூட்டு குடும்பமாக இருந்தாலும் மனைவிக்கே முதல் இடம் என்பதை உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் உணரலாம். உங்கள் பெற்றோர் உங்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் நடவடிக்கையின் மாற்றத்தின் மூலமும் அவர்கள் இருவருமகும் அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவதிலும் நீங்கள் அதை கண்டறிய இயலும்.
2.திருமணம் ஆன புதிதில் அம்மா அப்பா என்ன சொல்லுவாங்களே எதாவது நினச்சு பாகளோனு மனைவி கிட்ட நேரம் செல்லவிடாமல் இருக்க கூடாது. வீட்டில் செய்யும் வேலைகளுக்கு மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தல், மனைவி சமையல் தெரிந்தவராக இருந்தால் அவருகும் வாய்ப்பு கொடுத்தல், சமையல் தெரியதவரக இருந்தால் ஊக்க படுத்த வேண்டும். செய்த சமயலை அம்மா முன்பு பாராட்ட வில்லை என்றாலும் தனியாக இருக்கும் போது பாராட்ட மறந்திட வேண்டாம்.
3.எப்பொழுதும் தமது வருமானத்திற்கு ஏற்ப வெளியே கூட்டி செல்வது உணவுகள் வாங்கி கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.
4. நாம் அனைத்தையும் பேசி நமது பேச்சை மட்டும் திணிக்காமல் மனைவி என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை கேட்க வேண்டும்.
5.மனைவி மற்றும் அம்மா இடையே ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்படும்பொழுது ஒரு தரமாகவோ அல்லது எதுவுமே பேசாமலோ இருந்து விடக் கூடாது அம்மா மீது தவரோ அல்லது மனைவி மீது தவறு அதை சுட்டிக் காட்ட தவறக்கூடாது. திருமணமான தொடக்கத்திலேயே இதை செய்வதன் மூலம் நீங்கள் செய்யும் விஷயம் புதிதாக தெரியாது அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
6.கணவன் மற்றும் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு நான் பேசுவதா நீ பேசுவதா என்று காத்திருக்காமல் கணவன் தன்னுடைய வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது மனைவி இடையே எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் ஆகவே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு அந்தப் பிரச்சினையை பற்றி மட்டுமே யோசிக்காமல் இருவரும் கலந்துரையாடி அந்த பிரச்சனைக்கான தீர்வு கண்டறியாமல் மன்னிப்பு கேட்டு இனிமேல் அந்த தவறை திரும்பச் செய்யாமல் இருப்பதற்கான வழிமுறைகளை யோசித்து மன்னிப்பு கேட்ட பின்பு தான் தூங்க செல்ல வேண்டும்.
இன்பமான இல்லறம் அமைய மனைவி செய்ய வேண்டியவை:
1.திருமணமான பிறகு கணவன் எவ்வாறு மனைவிக்கு தான் முதலிடம் என்பதை உணரும் வேண்டும் என்று கூறுகிறோமோ அதே போலவே மனைவிக்கும் கணவன் தான் திருமணத்திற்கு பின்பு முதல் என்பதை உணர வேண்டும். திருமணத்திற்கு முன்பு தனது அப்பா தான் தனக்கு ஹீரோ தனக்கு பிடித்த நண்பர் தனக்கு பிடித்த மனிதர் என்பது இருக்கலாம் ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது பிறந்த வீட்டை பற்றிய புகழை பற்றி பாடுவதை நிறுத்த வேண்டும். திருமணத்திற்கு முன்பு தான் கோடீஸ்வரராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய கணவராக இருந்தாலும் அவரை மதிப்பதும் தன் குடும்பம் என்று எண்ணி தன்னால் முடிந்த எந்த உதவியை செய்தால் நாம் குடும்பத்தை முன்னேற்ற முடியும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.
2.இந்த உலகில் அனைவருக்கும் நம்மை பிடித்து விடுவதுமில்லை எல்லோரும் நம்மை வெறுப்பதும் இல்லை ஆகவே திருமணத்திற்கு பின்பு கணவரின் தாயார் நமக்கு பிடித்த மாதிரியும் அமையலாம் பிடிக்காத மாதிரியும் அமையலாம். அவர்களிடையே கருத்து வேறுபாடு சில நேரங்களில் ஏற்படக்கூடும். அப்பொழுது நாம் நமது தாயாக இருந்தால் நாம் எவ்வாறு அந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்போம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாம் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். நமக்கும் நமது மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும் பொழுது அந்த இடத்தில் கணவன் நமது பக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது ஏனெனில் 25 ,26 வருடம் வளர்த்த தாயை அவர்களால் எதிர்த்து இப்போது வந்த தனக்காக பேச முடியாது. நீங்கள் அந்த பிரச்சனையை எதிர்கொண்ட பிறகு நீங்கள் எவ்வாறு அந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்தீர்கள் உங்கள் பங்கு என்ன அதனால் உங்கள் மனம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கனிவான முறையில் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவர் அடுத்த முறை இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை ஏற்படும் பொழுது அவர் அவரின் கருத்தை அங்கு தெரிவிக்க நேரிடும்.
3.திருமணத்திற்கு முன்பு சமைக்க தெரிகிறதோ இல்லையோ அது வேறு ஆனால் திருமணத்திற்கு பின்பும் எனக்கு சமைக்க தெரியாது என்பதை ஒரு ஃபேஷன் ஆக மாமியார் வீட்டில் சொல்வது மிகவும் தவறு நமக்கு சமைக்கத் தெரிகிறதோ இல்லையோ அடுத்தவரின் கருத்தைக் கேட்டோ அல்லது இணையதளங்களில் தேடியோ தனது கணவருக்கு பிடித்த உணவுகளை தனது கையால் சமைத்து பரிமாற வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது கணவருக்கு தம்மீது மிகவும் அளவு கடந்த அன்பும் அக்கறையும் பெருகம்.
4.திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் உள்ள மாமியார் மாமனார் கொழுந்தியாள் நங்கையார் கொழுந்தன் மைத்துனன் கொழுந்தனாரின் மனைவி மைத்துனரின் மனைவி ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக பழகி விட்டு சில நாட்களுக்குப் பிறகு ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் திரும்பவது போன்ற நடந்து கொள்ளக் கூடாது. திருமணத்திற்கு பிறகு மிகவும் நெருக்கமாகவோ அல்லது பேசாமலேயே இருந்து விடாமல் அன்போடும் அமைதியோடும் நடந்து கொண்டு அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பின்பு நான் என்ன விரும்புகிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எந்த செயலாக இருந்தாலும் முதலில் கொடுக்க வேண்டும் பின்பு தான் பெற இயலும் அது எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.
5.கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்பொழுது அவன் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது அது தன்னுடைய கணவருக்கு மரியாதை நிமித்தமாக இருக்கக்கூடும். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் கலைந்த நிலையிலும் அடுத்தவருக்கு தனது கணவரை பற்றிய எண்ணம் தவறாகவே இருக்கக்கூடும்.
ஆகவே கணவனும் மனைவியின் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து எல்லாம் முடிவுகளையும் எடுத்து பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்க இல்லறம் நல்லறமாக அமையட்டும்.
வாழ்க வளமுடன் !!!
Social Plugin